2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

சிகிச்சைக்கு வந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மருத்துவமனை ஊழியர்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா சிகிச்சைக்கு வந்த சிறுமியை, மருத்துவமனை ஊழியர் ஒருவர்  6 மாதங்களாகப் பாலியல்  தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் குண்டூரை சேர்ந்த தாய் ,மகளுக்குக்  கொரோனாத்  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக   இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதில் சிகிச்சை பலனின்றி சிறுமியின் தாய் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியரான சுவர்ணகுமாரி என்பவர், அச்சிறுமியின் தந்தையிடம் ”உங்கள் மகளுக்கு ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றை நாட்டு மருந்து மூலம் குணப்படுத்திவிடலாம்என்று தெரிவித்ததாகவும் இதனை உண்மை என்று நம்பி அவர் தனது மகளை அப்பெண்ணிடம் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அச்சிறுமியை அழைத்துச் சென்ற சுவர்ணகுமாரி விஜயவாடா, காக்கிநாடா, நெல்லூர் , ஐதராபாத் போன்ற இடங்களுக்கு கடத்தி சென்று பாலியில் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அக்கும்பலிடம் இருந்த தப்பித்த சிறுமி, குண்டூரில் உள்ள தனது தந்தையிடம் நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ள நிலையில்,

அவர் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகாரொன்றை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சுவர்ணகுமாரி உட்பட  61 பேரை பொலிஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X