2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 29 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அராரியா;

பீஹாரில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கை ஒரே நாளில் விசாரித்து, வாலிபருக்கு ஆயுள் காலச் சிறை தண்டனை விதித்து 'போக்சோ' நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.

  30 வயது வாலிபன்  8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீட்டில் இருந்த சிறுமியின், 9 வயது சகோதரன் இதனை தடுத்துள்ளார். இதனால் சிறுவனைத் தாக்கியுள்ளார். பின்னர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் 'போக்சோ' உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வாலிபனை  கைது செய்தனர்.

அராரியா போக்சோ நீதிமன்றத்தில் தாக்கலான வழக்கு மீது  விசாரணை நடந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமி, சகோதரன், பெற்றோர் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.  மருத்துவ பரிசோதனை அறிக்கை ஆய்வு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பிலான வழக்கறிஞர்களின் வாதம், எதிர்வாதம் உடனடியாக நடத்தி முடிக்கப்பட்டது. அவற்றின் வாயிலாக வாலிபன்  மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இதையடுத்து அவருக்கு ஆயுள் காலம் முழுதும் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சஷிகாந்த் ராய் தீர்ப்பளித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .