2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறையிலுள்ள மகனால் தந்தைக்குச் சிறுநீரக தானம்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

தந்தைக்குச் சிறுநீரக தானம் செய்ய விருப்பம் தெரிவித்த சிறை கைதிக்கு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், போதை மருந்து வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இவரது தந்தைக்கு சிறுநீரகம் செயல் இழந்துவிட்டது. 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைப்பார்' என, டொக்டர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தந்தைக்கு சிறுநீரக தானம் வழங்க, சிறையில் உள்ள மகன் விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து, இவர் தாக்கல் செய்த பிணை மனுவை, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தந்தைக்கு சிறுநீரக தானம் செய்ய விரும்பும் கைதிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அனுமதி அளித்தது.'சிறுநீரக தானம் செய்ய உடல் மற்றும் மன அளவில் அவர் தகுதியானவர் என அரசு மருத்துவமனை சான்றளித்தால், மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில்பிணைக்கு விண்ணப்பிக்கலாம்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.மனுவை விரைவாக விசாரித்து, கருணை அடிப்படையில் குற்றவாளிக்கு பிணை வழங்கவும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .