2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சிவசங்கர் பாபா மீது குவிகிறது பாலியல் வழக்குகள்

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 14 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவசங்கர் பாபா மீது ஏற்கெனவே 3 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு மாணவி கொடுத்த புகாரின்பேரில் அவர் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் தனது பாடசாலையில்  படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக  கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, 3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில், இவர் மீது தனித் தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அவருக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியையும்  பொலிஸார்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவசங்கர் பாபாவின் பாடசாலையில் படித்த மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் ஒன்லைன் மூலம் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார்.

இதேபோல மற்றொரு முன்னாள் மாணவிக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெங்களூருவில் வசிக்கும் தாய் புகார் கொடுத்துள்ளார். இந்த 2 புகார்களின்பேரில் சிவசங்கர் பாபா மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்  பொலிஸார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இந்நிலையில், தற்போது வேறொரு மாணவி கொடுத்த புகாரின்பேரில் சிவசங்கர் பாபா மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

சிவசங்கர் பாபா மீது இதுவரை மொத்தம் 4 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .