2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

சீக்கியர்கள் விமான நிலையத்தில் கத்தியைப் பயன்படுத்த அனுமதி

Ilango Bharathy   / 2022 மார்ச் 15 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிக்கியர்கள் தங்கள் மத நம்பிக்கையின்படி கிர்பான் எனப்படும் வளைந்த கத்தியை தம்மோடு வைத்திருப்பது வழக்கம். 

எனினும் அண்மையில் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் சீக்கிய ஊழியர்கள் எந்தவொரு இந்திய விமான நிலைய வளாகத்திலும் கிர்பானை எடுத்துச் செல்ல முடியாது என கடந்த 4ஆம் திகதி விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம் தடை விதித்தது.

இவ் உத்தரவுக்கு முன்னணி சீக்கிய அமைப்பான ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் சபையினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 12ஆம் திகதி அத் தடை நீக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து மார்ச் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட உத்தரவில், கிர்பானை சீக்கியப் பயணிகள் மட்டுமே எடுத்துச் செல்ல முடியும் எனவும், அந்த கத்தியின் மொத்த நீளம் 9 அங்குலத்திற்கு மேற்படாமலும், கூர்மையான பிளேடின் நீளம் 6 அங்குலத்திற்கு மேற்படாமல்  இருக்கவும்  வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இந்தியாவிற்குள் இந்திய விமானங்களில் விமானத்தில் பயணிக்கும் போது மட்டும் கிர்பான் அனுமதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் "சீக்கிய பயணிகளுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும், ஆனால் விமான நிலையத்தின் உள்நாட்டு அல்லது சர்வதேச முனையத்தில் பணிபுரியும் சீக்கியர் உட்பட அனைத்து ஊழியர்களும் கிர்பானை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்," என்றும் கூறப்பட்டிருந்தது. 

இதற்கு ஷிரோமணி குருத்வாரா பர்பந்தக் சபைத் தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் ” விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அலுவலகம், முந்தைய உத்தரவில் திருத்தம் செய்து மார்ச் 12ஆம்திகதி  புதிய விதிமுறையை வெளியிட்டது.

 

அதில், சீக்கிய பணியாளர்கள் விமான நிலையத்திற்கு கிர்பானை கொண்டு வரக்கூடாது என்ற பத்தியை நீக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .