2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சீண்டாதீர் பதிலடி கடமையாக இருக்கும்!

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 16 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவை யாராவது சீண்டினால் அவர்களுக்கு கொடுக்கப்படும் பதிலடி கடுமையானதாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றது முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும் இராணுவ வீரர்களுடன் மோடி கொண்டாடி வருகிறார். இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகையை, ராஜஸ்தான் மாநிலத்தில், தார்பாலைவனத்தை ஒட்டியுள்ள லாங்கேவாலா இராணுவ நிலையில் உள்ள வீரர்களுடன் கொண்டாடினார். அவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:

நாட்டின் எல்லைப் பகுதியை விரிவாக்கம் செய்வது, 18ஆம் நூற்றாண்டின் சிந்தனை. ஆனால், சில ஆக்கிரமிப்பு சக்திகள் (சீனா), எல்லை விரிவாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சக்திகளால் உலகம் பல பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. அந்த சக்திகளுக்கு எதிராக இந்தியா குரல் கொடுத்து வருகிறது.

மற்றொரு புறம், சிலர்(பாகிஸ்தான்) பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறார்கள். அந்த பயங்கரவாதத்தை அவர்களின் மண்ணுக்கே சென்று இந்திய இராணுவ வீரர்கள் ஒடுக்கியுள்ளனர். நாட்டின் எல்லைகளைக் காப்பதில் இந்திய இராணுவ வீரர்கள் உறுதிகொண்டுள்ளனர். அவர்களை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. நாட்டின் எல்லையைக் காப்பதில் இந்தியா சமரசம் செய்துகொள்ளாது என்பதை உலகம் நன்கு அறியும்.மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. இதையே மற்றவர்களுக்கும் இந்தியா தெரிவிக்கிறது.  

 மேலும், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில்;

யாராவது நம்மைத் தாக்கினால், அவர்களுக்கு அதே பாணியில் தக்க பதிலடி கொடுப்பதே இந்திய பாதுகாப்புப் படைகளின் வலிமையாக உள்ளது. இதனால்தான், இந்தியப் படைகளை உலக நாடுகள் நம்பிக்கையோடு பார்க்கின்றன. உலக நாடுகளுடன் இணைந்து இந்தியப் படைகள் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக அவை ஒன்றிணைந்து போராடுகின்றன என்றார் மோடி. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .