2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சீன இராணுவத்தை கண்காணிக்க இந்தியா புதிய வலையமைப்பு

Editorial   / 2021 ஜூலை 28 , பி.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா

சீன இராணுவத்தை உன்னிப்பாகக் கண்காணிக்கும் வகையில் இந்திய பாதுகாப்புப் படையினர், செயற்கை கோள்கள், ட்ரோன்கள், கெமராக்கள் போன்றவற்றின் உதவியுடன் புதிய வலையமைப்பொன்றை உருவாக்கி வருகின்றனர்.

ஒரு தொகை புதிய கெமராக்கள் மற்றும் சென்சார்கள் என்பன இதில் அடங்கும். அருணாச்சல் பிரதேசத்தில் அவர்கள் இந்த நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளனர்.

உயர் தெளிவுத்திறன்மிக்க தொலை கட்டுப்பாட்டு கெமராக்கள் தூர இடங்களில் நடப்பதை கண்காணிப்பதிலும் படையினர் அவ்விடங்களை அடைவதற்கும் இந்த புதிய வலையமைப்பு உதவி புரியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த கண்காணிப்பு வலையமைப்பானது அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப தமது கொமாண்டர்கள் விரைந்து பதில் அளிக்க உதவும் என்றும் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவளை இந்தியாவும், சீனாவும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக எந்தவேளையிலும் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது என்றும் அந்த செய்தியில் ​மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .