2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

’சுதந்திரம் வெறும் பிச்சை தான்’ இழிவான பேச்சு சர்சையானது

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 17 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை

"பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி. மோடி தலைமையில் ஆட்சி அமைந்த 2014ஆம் ஆண்டு தான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது. 1947ஆம் ஆண்டு கிடைத்தது வெறும் பிச்சை தான்" என்று இந்திய சுதந்திரத்தைப் பற்றி இழிவான கருத்து தெரிவித்திருந்த கங்கனா ரணாவத் தற்போது தேசத் தந்தை மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பிரிவில் சில கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். இதற்காக, 1940ஆண்டு வெளியான செய்தித் தாளின் சில பழைய கட்டுரைகளை மேற்கோள் காட்டி தனது கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

அவரது இஸ்டாகிராம் ஸ்டோரீஸில் இடம்பெற்றிருப்பவை:

 

நீங்கள் காந்தி ஆதரவாளராக இருக்கலாம். இல்லையேல் நேதாஜியின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால், ஒரே நேரத்தில் நீங்கள் இருவரின் ஆதரவாளராகவும் இருக்க முடியாது. எனவே, நீங்கள் சுயமாக முடிவு செய்து யாருக்கு ஆதரவு என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

அதிகாரப் பசியில் இருந்தவர்கள், மிகவும் தந்திரமாக செயல்பட்டு சுதந்திரப் போராட்ட வீரர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் காட்டிக்கொடுத்து ஒப்படைத்தனர். அத்தகையவர்களுக்கு உண்மையில் அடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் துணிச்சல் இல்லை.

மகாத்மா காந்தி ஒருபோதும், பகத் சிங்கையோ, சுபாஷ் சந்திர போஸையோ ஆதரித்தது இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் நினைவாற்றலில் எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களை அவர்களின் பிறந்த நாளில் நினைவு கூர்வது ஏற்புடையது அல்ல. இது மேம்போக்கானது, பொறுப்பற்ற செயலும் கூட. வரலாற்றையும், உண்மையான வரலாற்று நாயகர்களையும் ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் பதிவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .