2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

சுயேட்சை வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 06 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தர்பங்கா,

ஹயகாட் சட்டசபை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள  ரவீந்திரநாத் சிங்  மீது இனந்தெரியாத   துப்பாக்கிதாரிகளால் சுட்டதில் காயமுற்ற வேட்பாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றுவரும் இச்சந்தர்ப்பத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ளது.

3ஆவது கட்ட தேர்தல் 78 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது.  வடகிழக்கு பீகாரின் சீமாஞ்சல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது.

இதில் படுகாயமடைந்த அவர் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு உள்ளார்.  இதுபற்றி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .