2026 மார்ச் 09, திங்கட்கிழமை

சுற்றுலாச் சென்ற கார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்தது

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 28 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா  காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டத்தில், தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறன. 

அந்த வகையில் ஒருசில முக்கிய சுற்றுலா தளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கொடைக்கானல் சுற்றுலா தளத்தையும் பார்வையிட அனுமதி உள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இச் சூழலில் இன்று காலை

புதுச்சேரியை சேர்ந்த லோரன்ஸ் (51), தண்டபாணி (51), அழகன் (28), விஜயகுமார் (30) ஆகிய நான்கு பேரும் காரில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலுக்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர்.

அவர்கள் சென்ற காரை, புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் செலுத்திச் சென்றுள்ளார். இந்நிலையில், வட்டக்கானல் பகுதியில் உள்ள வளைவில் கார் திரும்பும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது.

அப்போது சாலையோரத்தில் பாய்ந்து 50 அடி பள்ளத்தில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.

எனினும் பள்ளத்தில் பெரியமரம் இருந்ததால் கார் மேலும் பள்ளத்துக்குச் செல்லாமல் தடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஐந்து பேரும் படுகாயமடைந்து  கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  விபத்து குறித்து பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .