2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தியா மீண்டும் திறப்பு

Editorial   / 2021 நவம்பர் 21 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020 ஆண்டு மார்ச் மாதம் சுற்றுலா விசாவை நிறுத்திய பிறகு, இந்தியா இப்போது 99 பரஸ்பர நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத நுழைவை அனுமதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் குறைவாக இருப்பதால், 20 மாத கால தடையை முடிவுக்கு கொண்டு, வெகுஜன வெளிநாட்டு சுற்றுலாவிற்கு நாடு தனது எல்லைகளை மீண்டும் திறந்திருப்பதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் முதல், சரக்கு விமானங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டது மற்றும் இந்திய அதிகாரிகள் அதை வணிக விமானங்களில் வருபவர்களுக்கும் விரிவுபடுத்தினர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுற்றுலா விசாவை நிறுத்திய பிறகு, இந்தியா இப்போது 99 பரஸ்பர நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லாத நுழைவை அனுமதிக்கிறது.

அத்தகைய சுற்றுலாப் பயணிகள் வருகைக்குப் பிறகு 14 நாட்களுக்கு அவர்களின் உடல்நிலையை மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்று அரசாங்கம் கோருகிறது. நாட்டில் நிலவும்​ கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டும், உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டுப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் இந்தியா கடந்த ஆண்டு நிறுத்தியது.

அது மட்டுமல்ல, விமானங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பயணத்திற்கு சாதகமான சூழ்நிலைகளைக் கொண்ட நாடுகளுடன் சிறப்பு 'காற்று குமிழி' ஏற்பாடுகளை அமைத்தல் உட்பட, சர்வதேச பயணத்திற்கு நாடு பல கட்டுப்பாடுகளை விதித்தது.

இருப்பினும், தொற்றுநோய் நிலைமை படிப்படியாகத் தளர்த்தப்படுவதால், வெளிநாட்டுப் பயணிகள் பின்னர் இந்தியாவில் நுழைவதற்கும் தங்குவதற்கும் வசதியாக ஒரு சுற்றுலா விசாவைத் தவிர வேறெந்த வகையான இந்திய விசாவையும் பெற அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 30,20,119 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த கொவிட்-19 தடுப்பூசி  ஏற்றல், திங்களன்று 112.34 கோடியைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 10,229 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. செயலில் உள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,34,096 ஆக உள்ளது, இது 523 நாட்களில் மிகக் குறைவு.   தற்போது நாட்டின் மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 0.39% ஆகும், இது மார்ச் 2020 க்குப் பிறகு மிகக் குறைவு.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .