2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சூரியனால் ஏற்படும் ’பூஜ்ஜிய நிழல்’

A.K.M. Ramzy   / 2021 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடுமலை;

உலகில் நடக்கும் சில நிகழ்வுகள் அதிசயத்தக்கவை அதிகம் உள்ளன. சில நிகழ்வுகள் நூறு வருடங்களுக்கு ஒருமுறை  இடம்பெறுவது உண்டு. அதேநேரம் ஆண்டுக்கு இரு முறை மட்டுமே நிகழுவது பூஜ்ஜிய நிழல் தின நிகழ்வு, உடுமலையில் நேற்று அறிவியல் கழகம் வாயிலாக கண்டறியப்பட்டது. சூரியனால் ஏற்படும் ஒரு பொருளின் நிழல், காலையில் அதிக நீளத்தோடு இருந்து, உச்சி நேரத்தில் குறையும்.பின், சூரியன் மறையும் வரை மீண்டும் நீள்கிறது.

அதேநேரம், ஓராண்டில் இரு முறை, சூரியனால் ஏற்படும் நிழலை காண இயலாது. அவ்வகையில், ஒரு பொருளின் நேர் மேலாக, 90 டிகிரி உச்சியில் சூரியன் வரும் நிகழ்வு, பூஜ்ஜிய நிழல் தினமாக அழைக்கப்படுகிறது. அந்த நிகழ்வு, நேற்று உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக கண்டறியப்பட்டது.

இதன் ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறுகையில், 'பூஜ்ஜிய நிழலை கண்டறியும் வகையில் உற்று நோக்கப்பட்டது. பகல் 12:24 மணிக்கு, சூரியனால் ஏற்பட்ட பொருளின் நிழல், நேர்குத்தாக கீழே விழுந்தது. அப்போது, பொருளின் நிழல் தென்படவில்லை. இந்த நிகழ்வைக் கொண்டு, சூரியனின் இயக்கம், பூமியின் ஆரம், அட்சரேகை அமைப்பை கண்டறியமுடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X