2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சூர்யாவின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

Ilango Bharathy   / 2021 நவம்பர் 19 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூர்யா நடித்து அண்மையில்  வெளிவந்த  ஜெய்பீம் திரைப்படம் குறித்து  சர்ச்சைகள் பல எழுந்துள்ள நிலையில்  அவரது இல்லத்திற்கு முன்பு துப்பாக்கி ஏந்திய  பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இப்படத்தில் குறிப்பிட் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை  அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அது தொடர்பான அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார்.

 அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 5 கோடி ரூபா  இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி குறித்த சமூதாயத்தின் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

 அத்துடன்  சூர்யாவை எட்டி உதைப்பதற்கு 1 லட்சம் ரூபா தருவதாகவும் பாமக பிரமுகர் ஒருவர் கூறியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்தும் சூர்யாவிற்கு ஆதரவாகவும் திரைத்துறையை சார்ந்தவர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு வீட்டில் துப்பாக்கி ஏந்திய 5 பொலிஸார் கடந்த மூன்று நாட்களாக  பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .