A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை:
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் மறியல் போராட்டம் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், 4.5 இலட்சம் காலி பணியிடங்கள் நிரப்புதல், காலமுறை ஊதியத்தில் பணி நியமனம், 8ஆவது ஊதிய குழுவில் நிறைவேற்றப்பட்ட 21 மாதம் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
சென்னையில் எழிலகம் எதிரே மறியலில் ஈடுபட்ட 42 அரசு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் திருவல்லிக்கேணியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று 2ஆவது நாளாக மறியல் நடந்தது. வட சென்னை மாவட்ட பொருளாளர் ஏழுமலை, தென் சென்னை மாவட்ட செயலாளர் வினோத் குமார் ஆகியோர் தலைமையில் எழிலகம் ஆவின் பார்லர் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை பொலிஸார் கைது செய்தனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago