Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 19 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சில விதிகள் மற்றும் பாதுகாப்பு மீறல்கள் தொடர்பாக நிபந்தனைகள் விதித்து உள்ளன என்பது தெரிந்ததே.
பொதுவாக தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது உள்பட சில பொதுவான விதிகள் அனைத்து ஓட்டுனர்களுக்கும் தெரிந்திருக்கும்.
இந்தியாவில் வாகனம் ஓட்டும் போது நீங்கள் சரியான உடைகளை அணிந்து இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் செல்லும்போது முழுமையாக மூடிய காலணிகளை அணிய வேண்டும். சாதாரண செருப்பு அல்லது சப்பல் அணிந்து வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
அத்துடன் ஒரு நபரிடம் இரண்டு ஓட்டுநர் உரிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அந்த நபர் அபராதம் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டும் போது கையடக்க தொலைபேசியில் பேசக்கூடாது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இதில் விதிவிலக்கு உள்ளது. எந்தவொரு ஓட்டுனரும் தங்கள் வாகனத்தை இயக்கும் போது, வழி கேட்பதற்காக கையடக்க தொலைபேசியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .