Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 மார்ச் 25 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுவை கம்பன் கலையரங்கம் அருகே உள்ள தனியார் கட்டிடம் ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் சுமார் 60 அடி உயரத்தில் 5க்கும் மேற்பட்ட குரங்குகள் இருந்தன. அதிலொரு குரங்கு விலையுயர்ந்த அலைபேசியை வைத்து பார்த்துக்கொண்டிருந்தது.
இதனை, அந்த வழியாக சென்றவர்கள் கவனித்துவிடவே தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்தி குரங்கின் செயல்பாடுகளை கவனித்தனர்.
தனியார் ஆஸ்பத்திரி கட்டிடத்தில் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி ஒருவர், துணிமணிகளை கழற்றி அதனுடன் வைத்திருந்த அலைபேசியை குரங்கு தூக்கி சென்றிருப்பதும் தெரியவந்தது.
குரங்கிடம் இருந்து அலைபேசியை கைப்பற்ற தொழிலாளர்கள் பல்வேறு வகையில் முயற்சி மேற்கொண்டனர். அங்கிருந்த இளைஞன் ஒருவர், அழைப்பை எடுத்து பார்த்தார். சத்தம் கேட்கவே சற்று மிரண்டது. எனினும், பலவித வண்ணங்கள் தோன்றவே அதை ஆச்சரியத்துடன் திருப்பி திருப்பி பார்த்தது. ஆனால் அலைபேசியை மட்டும் அது விடுவதாக இல்லை.
கூட்டத்திலிருந்த ஒருவர் பட்டாசு வாங்கி வந்து கொளுத்தி குரங்கு நோக்கி வீசினார். வெடி சத்தத்துகடகு: மிரண்டு போன குரங்கு, அலைபேசியை செல்போனை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. அது கம்பிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டது. அதனை எடுக்க இளைஞன் ஒருவர் அந்தரத்தில் தொங்கியபடி சென்றார். எனினும், அலைபேசி தரையில் விழுந்து நொறுங்கியது. சுமார் ஒருமணிநேர போராட்டத்துக்கு பின்னரும் செல்போனை நொறுங்கிய நிலையிலேயே மீட்ட தொழிலாளி வருத்தத்துடன் அங்கிருந்து சென்றார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago