2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

செல்ல நாய்க்கே 2 ஏக்கர் நிலத்தை உயில் எழுதிய விவசாயி

A.K.M. Ramzy   / 2021 ஜனவரி 02 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

போபால்

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தான் வளர்த்து வரும் செல்ல நாய்க்கு உயிலில் 2 ஏக்கர் நிலம் எழுதி வைத்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி நாராயண் வர்மா. இவருக்கு விவசாய நிலங்கள் உள்ளன. நடுத்தர வயதுடைய நாராயண் வர்மா, சமீபத்தில் தனது சொத்து குறித்து உயில் எழுதி வைத்தார்.

அந்த உயிலில் தனக்கு சொந்தமான சொத்தின் ஒரு பகுதியை தான் வளர்க்கும் செல்ல நாயின் பெயரிலும் எழுதி வைத்துள்ளார். இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது நாய் மீது விவசாயி நாராயண் வர்மாவுக்கு அவ்வளவு பிரியம் என்பதை விட குடும்ப சண்டையால் வெறுத்துப் போய் நாயின் பெயரில் அவர் சொத்து எழுதி வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து விவசாயி நாராயண் வர்மா கூறுகையில், ‘‘எனக்கு சுமார் 21 ஏக்கர் நிலம் உள்ளது. எனது நிலத்தின் ஒரு பகுதியை என் செல்ல நாயின் பெயரில் எழுதி வைத்துள்ளேன். நாய்க்கு மட்டுமின்றி எனது மனைவி சம்பா பாய் பெயரிலும் சொத்துகளை உயிலில் குறிப்பிட்டுள்ளேன்.

எனது மறைவுக்குப் பிறகு எனது மனைவிக்கும் என் செல்ல நாய்க்கும் அந்த சொத்துகள் சேரும். குடும்பத் தகராறில் ஏற்பட்ட கோபத்தில் அந்த உயில் எழுதப்பட்டது. இப்போது குடும்பத்தில் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டன’’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .