2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

’சேதாரம் இல்லாத சென்னை’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 10 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

மழைக்காலம் முடிந்த உடன், நிரந்தரமாக சேதாரம் இல்லாத சென்னையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை ஸ்டாலின் 4வது நாளாக ஆய்வு செய்தார். தி.நகர் விஜயராகவா வீதியில் மழை, வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட அவர், மாம்பல் கால்வாய் பகுதியில் கழிவுகளை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 'ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இலஞ்சம் வாங்கி ஊழல் செய்து, கமிஷன் பெற்று அரைகுறையாக பணிகளைச் செய்திருக்கிறார்கள். அதனால் தான் தி.நகரில் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மழை இருக்கிறது என்கிறார்கள். அதையும் பார்த்துவிட்டுத்தான் மத்திய அரசாங்கத்திடம் நிவாரணம் கோர முடியும்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மீட்பு பணி நடந்து வருகிறது. மேயர், துணை முதலமைச்சர்  பதவியில் இருந்தபோதே மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்தேன். தற்போது முதலமைச்சராக மழை பாதிப்பை ஆய்வு செய்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசாங்கம்  எதுவும் செய்யவில்லை. ஆட்சிமாற்றம் காரணமாக கடந்த 6 மாதங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

அதில் 50 முதல் 60 சதவித பணிகள் நிறைவு பெற்று இருக்கிறது. இன்னும் செய்ய வேண்டியுள்ளது. அதை, இந்த மழைக்காலம் முடிந்தவுடன் அதையும் செய்து நிரந்தரமாக சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம்.இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .