A.K.M. Ramzy / 2021 மார்ச் 16 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேலம்:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி மற்றும் அகில இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது
இந்த கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி ஆத்தூரிலும், சங்ககிரியில் சமத்துவ மக்கள் கட்சியும் போட்டியிடுகின்றன. இது தவிர 9 தொகுதிகளிலும் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
அதற்காக கோவையில் இருந்து இன்று காலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்துக்கு வரும் அவர் அங்கு பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி, மேட்டூர் தொகுதியில் வாக்கு சேகரிக்கிறார்.
இரவில் சேலம் மாநகரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதையொட்டி அந்த கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
52 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
4 hours ago