A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 16 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
திண்டுக்கல்
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற பொதுமக்களிடம் ஆதரவுகேட்டு தமிழகம் முழுவதும் சைக்கிளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே தேர்தல் பிரசாரம் களைகட்டத் தொடங்கி விட்டது. அதிமுக, திமுக, உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பிரசாரத்தை முன்னதாகவே தொடங்கிவிட்டனர்.
இதையடுத்து தற்போது பிரதான கட்சிகளின் தொண்டர்களும் களம் இறங்கத் தொடங்கிவிட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவி. திமுக தொண்டரான இவர், சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் கடந்த ஜனவரி 23ஆம் திகதி தனது பயணத்தை தொடங்கினார். கடந்த பெப்ரவரி 10ஆம் திகதியன்று திண்டுக்கல் மாவட்டத்தில் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.துண்டுபிரசுரங்களையும் வழங்கி திமுக வுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago