2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

சோகத்தில் கங்குலியின் ரசிகர்கள்

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் இந்திய கிரிக்கெட் சபையின் (பிசிசிஐ) தலைவருமான செளரவ் கங்குலிக்குக் கொரோனாத்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 ஆம் கட்டத் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட கங்குலிக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போதே கங்குலிக்கு கொரோனாத்  தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு (27) உறுதி செய்யப்பட்டது.

இச்செய்தியானது கங்குலியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுது்தியுள்ளது. 

இந்நிலையில் அவர் நலமாக இருப்பதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X