A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
டில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136ஆவது நிறுவன தின விழாவில் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்காத நிலையில், தலைமையகத்தில் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி கட்சிக் கொடியேற்றி னார்.
காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது நிறுவன தின விழா டில்லியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்துவரும் சோனியா காந்தி இவ்விழாவிலும் பங்கேற்கவில்லை.
ராகுல் காந்தி வெளிநாடு சென்றுள்ளதால் அவராலும் பங்கேற்க இயலவில்லை. விழாவில் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா வதேரா, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் ராகுல் காந்தி பங்கேற்காதது குறித்த கேள்விக்கு பிரியங்கா பதிலளிக்கவில்லை. தனிப்பட்ட பயணமாக ராகுல் ஞாயிற்றுக்கிழமை வெளிநாடு சென்றுள்ளார்.
அவர் எங்கு சென்றுள்ளார் என கட்சி தெரிவிக்கவில்லை. அவர் இத்தாலி சென்றுள்ளார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026