2025 மே 10, சனிக்கிழமை

ஜனநாயக குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது

Mithuna   / 2023 டிசெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததால் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் இரு அவைகளில் இருந்தும் 141 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இந்த கூட்டத் தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது.

இந் நிலையில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து சோனியா காந்தி “இந்த அரசால் ஜனநாயக குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒருபோதும் இதுபோன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது கிடையாது. அவர்கள் மிகவும் நியாயமான கோரிக்கைகளைத்தான் முன்வைத்தனர்” என தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை (20) காலை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X