A.K.M. Ramzy / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை ‘வாட்ஸ்அப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
என்னை வாழவைத்த தெய்வங்களான என் அன்பிற்குரிய என் ரசிகர்களும், மக்களும்தான் எனக்கு கடவுள். அவர்களிடம் எல்லா உண்மைகளையும் எப்போதுமே
சொல்வது என்னுடைய இயல்பு. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றத்துக்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல
மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2ஆம் திகதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.
இந்த கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும்
சந்திக்க முடியவில்லை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை என்றும் கூறினார் ரஜினி காந்த்.எனக்கு என் உயிர் பற்றிய கவலை இல்லை. என்னை நம்பி வருவோரின் நலன் குறித்து தான் கவலை. நான்
தொடங்குவதோ புது கட்சி. மக்களை நேரில் சந்திக்காமல், மாநாடுகள் நடத்தாமல், பொதுக் கூட்டங்கள் கூட்டாமல் வெறும் சமூக வலைத் தளங்கள், ஊடகங்கள் மூலமாக மட்டும் பிரசாரம் செய்தால், நான் எதிர்பார்க்கும் அரசியல் எழுச்சியை
மக்கள் மத்தியில் உருவாக்கி அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியாது. மருத்துவர்களின் ஆலோசனையை மீறி கட்சி ஆரம்பித்து, இடையில் என் உடல்நலம் பாதிப்படைந்தால் அது பல சிக்கல்களை உருவாக்கும்.
இதை இப்போதே சொல்ல காரணம், என்னை ஆதரிப்போரின் மத்தியில் நான் அரசியலுக்கு வருவேன் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் சூழலில், இந்த கொரோனா பிரச்சினை தொடரும் நிலையில், கடைசி நேரத்தில்
இந்த காரணங்களை காட்டி ஒருவேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் அது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கும்.
நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும்.
இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு என்றும் பதிவிட்டுள்ளார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago