2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஜனவரியில் பிறக்கிறது ’தமிழ் காமன்வெல்த்’

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 22 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை;

அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கும் தமிழ் கலாசார மாநாட்டில், 'தமிழ் காமன்வெல்த்' என்ற அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

உலக தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலக தமிழ் வம்சாவளி அமைப்பு ஆகியவை இணைந்து, இந்தாண்டுக்கான தமிழ் கலாசார மாநாட்டை, சென்னை கலைவாணர் அரங்கில், ஜனவரி, 8, 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.  இதில், பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில், தமிழர்களின் கலை, கலாசாரம், உணவு உடை, அணிகலன், கல்வி உள்ளிட்டவை குறித்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளன.

ஜனவரி மாதம் இது குறித்து, உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் கூறியதாவது:உலகில் 152 நாடுகளில், தமிழ் வம்சாவழியை சார்ந்தோர் பிரதமர், துணை பிரதமர், ஜனாதிபதி, எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட பல்வேறு அரசியல் பதவிகளில் உள்ளனர். அவர்கள், அந்தந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர். அவர்களை இணைக்கும் விதமாக, உலக தமிழ் வம்சாவழி மாநாடு அடுத்த ஜனவரி மாதம்நடைபெறவுள்ளது. தமிழ் கலாசாரம், வர்த்தகம், கலை, சித்த மருத்துவம் உள்ளிட்டவற்றை பரப்பவும், உலக தமிழர்களை ஒருங்கிணைக்கவும் வசதியாக, தமிழ் காமன்வெல்த் என்ற அமைப்பு உருவாக்கப் பட உள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .