A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டில்லி :
'உத்தர பிரதேசத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து ள்ளதால், மாநில அரசை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சி அமைக்க உத்தரவிட வேண்டும்' எனக் கோரிய மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி அமைந்துள்ளது.
இம்மாநிலத்தில் 'குற்றச்செயல்கள் மற்றும் பொலிஸாரின் விதிமீறல் படுகொலைகள் அதிகரித்துள்ளன. எனவே, மாநில அரசைக் கலைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், சுகின் என்பவர் மனு தாக்கல் செய்தார்.இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன், 'வீடியோ காணொலி வாயிலாக நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவில், 'உத்தர பிரதேசத்தில் நடக்கும் குற்றச் செயல்கள் தொடர்பாக, தேசிய குற்றப் பதிவு பணியகம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றில் பதிவான தகவல்கள் அடிப்படையில், ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன' என, சுகின் கூறி இருந்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது: இதுபோல் எத்தனை மாநிலங்களின் குற்றப்பதிவு களை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டீர்கள்?, அவற்றின் மீதான உங்கள் ஆய்வின் நிலை குறித்து விளக்கம் அளிக்க முடியுமா?
மனுவில் தெரிவித்துள்ள தகவல்கள் தொடர்பாக, எந்த ஆய்வையும் நீங்கள் மேற்கொள்ளவில்லை என, உறுதியாக தெரிகிறது.இந்த பிரச்சினையில், தொடர்ந்து வாதங்களை முன்வைத்தால், மனுதாரருக்கு அதிகபட்ச அபராதம் விதிக்க நேரிடும். இவ்வாறு கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago