A.K.M. Ramzy / 2021 ஜனவரி 14 , பி.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது.
வாடிவாசல் வழியாக சீறிப் பாயும் காளைகளின் திமிலை 'மாடுபிடி' 'மாடுபிடி' வீரர்கள் பிடித்து காளைகளை அடக்க முற்பட்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கின்றன. சில காளைகள், வீரர்களின் பிடியில் சிக்காமல் களத்தில் நின்று விளையாடின.
வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வெளியேறும் காளைகளின் திமிலை வீரர்கள் இறுகப் பற்றிக் கொண்டு காளை மூன்று சுற்றுகள் சுற்றும்வரை பிடித்திருக்க வேண்டும் அல்லது 100 மீற்றர் தூரம் வரை திமிலைப் பற்றிக்கொண்டு செல்ல வேண்டும். இந்த இரண்டில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் அந்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டு பரிசும் வழங்கப்படுகிறது.
19 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
8 hours ago
9 hours ago