A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 09 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை ;
வீடுகளில் காவலுக்கு நாய் வளர்க்கும் காலம்போய் சமீப காலமாக செல்லப்பிராணிகளாக நாய்களை வளர்க்கும் கலாசாரம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால் நாட்டு நாய்கள், வெளிநாட்டு நாய்களுக்கு மௌசு அதிகரித்துள்ளது.
அதனால், ஜல்லிக்கட்டுபோல் தற்போது மதுரையை மையமாகக் கொண்டு நாய்கள் கண்காட்சியும் பிரபலமடைந்துள்ளது.
வெளிநாட்டு நாய்கள், நாட்டின நாய்கள் விலை உயர்வுக்கு கண்காட்சியே ஒரு முக்கிய காரணம். ஜல்லிக்கட்டில் ஒரு காளை வெற்றிபெற்றால் அதன் மதிப்பு உயரும். அதுபோலவே நாய்கள் கண்காட்சியில் பங்கேற்று வெற்றிபெறும் நாய்களுக்கும், அந்த பெற்றோர் மூலம் பிறக்கும் குட்டிகளுடைய விலையும் பல மடங்கு விலை உயரும்.
அதற்காகவே நாய் வளர்ப்பார்கள், தங்கள் நாய்களை பழக்கப்படுத்தி நாய்கள் கண்காட்சிக்கு அழைத்து செல்வதை பொழுதுப்போக்காகவும், ஒரு தொழிலாகவும் கொண்டுள்ளதால் நாய்கள் கண்காட்சிக்கு மௌசு ஏற்பட்டுள்ளது.
சிறிய போட்டிகளில் தங்கள் நாய்களை வெற்றிபெற்று தரத்தை நிர்ணயித்தப்பிறகே இந்த போட்டிகளில் பங்கற்க முடியும். கண்காட்சியில் நாய்களை அதன் நிலையில் நிறுத்த வேண்டும், ஒரிஜினல் இனமாக, பல் சரியான வரிசையில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு நாய்க்கும் ஒரு நிலையில் பல் இருக்கும். அது சரியாக இருக்கிறதா என்று பார்க்கப்படும். எந்த எலும்பும் வளைந்து இருக்கக்கூடாது. உணவு பாத்திரத்தில் வைத்தால் அதை நாய் சரியான நிலையில் நின்று சாப்பிட வேண்டும்.
கண்காட்சியில் பங்கேற்க ஒவ்வொரு நாய்க்கும், அது எந்த ஊரில் பிறந்தது, அதன் பெற்றோர் உள்ளிட்ட அதன் குடும்ப விவரங்களை உள்ளடக்கிய சான்றினை வழங்க வேண்டும்.
மேலும், இந்த விவரங்கள் அடங்கிய ‘மைக்ரோ சிப்’ நாய் கழுத்தில் அல்லது காலில் இன்சர்ட் செய்ய வேண்டும். கண்காட்சியில் பங்கேற்க வரும் அந்த நாய்களை ஸ்கேன் செய்யும்போது மைக்ரோ சிப் விவரங்களும், சான்றிதழிலில் உள்ள விவரங்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.
நாயின் முன் கால், காது, வாய் உள்ளிட்டவை குரைக்கும்போது இந்தநிலையில்தான் இருக்க வேண்டும் என்ற பார்முலா கண்காட்சியில் பின்பற்றப்படும்.
அதில் எது ஒத்துப்போகுதோ, அந்த நாய்க்கும் ‘சிறந்த நாய்’ பட்டமும், மெடலும் கொடுப்பார்கள். அதன்பிறகு இந்த நாய்க்கும், இதன் மூலம் பிறக்கும் குட்டிகளுக்கும் மௌசு கூடும்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago