2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஜி-20 மாநாடு பிரகதி மைதானத்தில் புகுந்த தண்ணீர்

Freelancer   / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில் பெய்த கனமழையால் ஜி-20 மாநாடு நடைபெற்ற பிரகதி மைதானத்தில் மழைநீர் சூழ்ந்த காட்சி தற்போது பேசுபொருளாகி வருகிறது.

இதுதொடர்பான வீடியோ காட்சியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகளை 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயில் செய்த நிலையில், ஒரு மழைக்கே தண்ணீர் புகுந்துவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், வெற்று வளர்ச்சி அம்பலாகியுள்ளதாகவும் விமர்சித்துள்ளது. அதைத்தொடர்ந்து, பாரத் மண்டபத்தின் தென் பகுதியில் தேங்கியிருந்த மழை நீர் மோட்டார் பம்புகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X