A.K.M. Ramzy / 2020 நவம்பர் 01 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

லக்னோ
உத்தரப்பிரதேசத்தில் எங்கள் சகோதரிகளின் வாழ்க்கையில் விளையாடுபவர்களுக்கு எதிராகவும், லவ் ஜிகாத்தைத் தடுக்கவும் கடும் சட்டம் கொண்டுவரப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னோ அருகே ஜூனாபூரில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் நேற்று முதல்வர் ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்"மாநிலத்தில் இந்துப் பெண்களைப் பாதுகாக் கவும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் கடும் சட்டம் இயற்றப்படும்.
எங்கள் சகோதரிகளின் அடையாளத்தையும் பெருமையையும், மாண்பையும் குலைக்கும் வகையில் செயல்படுவோருக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். அவ்வாறு தொடர்ந்து எங்கள் சகோதரிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு விளைவிப்போருக்கு இறுதி ஊர்வலம் நடத்த வேண்டியது இருக்கும்.
சமீபத்தில் அலஹாபாத் நீதிமன்றம் ஓரு வழக்கில் தீர்ப்பளித்தது. மதம்மாறி திருமணம் செய்த ஜோடி பொலிஸ் பாதுகாப்புக் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
திருமணமான பெண் பிறப்பால் முஸ்லிம், திருமணம் செய்வதற்கு ஒரு மாதத்துக்கு முன் இந்து மதத்துக் குமாறியுள்ளார்.
திருமணம் செய்வதற்காக மதம்மாற முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்து மனுவைத் தள்ளுபடி செய்ததை இங்கு கூறுகிறேன்.
மாநிலத்தில் லவ் ஜிகாத்தை தடுக்க விரைவில் கடுமையாக சட்டம் கொண்டுவரப்படும். ”எனத் தெரிவித்தார்.
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
4 hours ago
7 hours ago