Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஏப்ரல் 16 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என பஞ்சாப் அரசாங்கம், இன்று அறிவித்துள்ளது.
பஞ்சாப்பில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்த நிலையில், அக்கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16ஆம் திகதி முதலமைச்சராகப் பதவியேற்று கொண்டார்.
கடந்த ஆண்டு ஜூனில் ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால், பஞ்சாப்புக்கு வந்தபோது, நாங்கள் ஆட்சி அமைத்தால் இலவச மின்சார வினியோக திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தனது முதல் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார்.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் இலவச மின் வினியோக திட்ட உறுதிமொழியின்படி, பொருளாதார வேற்றுமையின்றி, அனைத்து வீடுகளுக்கும் 300 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
இதனால், 200 யுனிட் வரை இலவச மின்சாரம் பெற்று வருவோர் அனைவரும் 300 யுனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் எனவும் 300 யுனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் மேற்குறிப்பிட்ட வகையினர், மேலதிக யுனிட்டுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மின்சார பலன்கள் பெறாதவர்கள் அனைவரும் மாதத்துக்கு 300 யுனிட்டுகளை இனி பெற்று கொள்ள முடியும் எனவும் மாதம் ஒன்றுக்கு 300 யுனிட்டுகளுக்கு மேலதிகமாக மின்நுகர்வு ஏற்பட்டால், அவர்கள் மொத்த மின்உபயோகத்திற்கான கட்டணமும் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், வீடு தேடி ரேசன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டம் ஒன்றை பகவந்த் மான் அறிமுகப்படுத்தினார். ஆம் ஆத்மியின் தேர்தல் அறிவிப்பில் முக்கிய அம்சம் ஆக இந்த திட்டமும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago