A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண்டிபட்டி;
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைக்கு பலமுறை அழைத்தும் ஓ.பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன் என திமுக மாநில இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில்;
மோடியிடம் சிறந்த அடிமையாக இருப்பவர்கள் யாரென்று ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்குப் போட்டி வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்று கூட சொல்ல முடியாத நிலை உள்ளது. ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம்தான் முதலில் கூறினார். ஆனால் விசாரணை ஆணையம் அவருக்கு பத்து முறை அழைப்பு கொடுத்தும், ஏன் இதுவரை ஆஜ ராகவில்லை.ஹோட்டல் நடத்தி வந்த ஓ.பன்னீர் செல்வம் இன்றைக்கு ஊழலில் திளைத்து பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதியாக மாறி இருக்கிறார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026