Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 05 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அரசியலில் ஆண்கள் மட்டுமே அதிகம் இருந்த காலகட்டத்தில் அதிரடியாக நுழைந்து, மிகப்பெரும் உச்சத்தை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று (05) அனுஷ்டிக்கப்படுகிறது.
14 ஆண்டுகள் 4 மாதம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ்நாட்டு அரசியலில் பெரும் ஆளுமையாக இருந்தவர்.
அவர் பொதுச்செயலாளராக பதவியேற்றது முதல், அவரது கட்டளையே கட்சியின் சாசனமாக இருந்தது. எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுகவின் ஒற்றை முகமாக ஜெயலலிதாவே இருந்தார்.
தமிழக அரசியலில் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் அவரது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.
தமிழக அரசியலில் முதுபெரும் தலைவரான கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்தவர். இவர் 2016-ம் ஆண்டில் உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் மர்மமான சிகிச்சைக்கு பிறகு டிசம்பர் மாதம் 5-ம் திகதி உயிரிழந்தார்.
அதற்கமைய இன்றைய தினம் (05) அவரது ஏழாவது நினைவு தினம் தமிழக மக்களால் அனுசரிக்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா, சென்னையில் அதிக புயல் மற்றும் மழை காரணமாக இன்று நடைபெறவிருந்த அஞ்சலி நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் இன்று காலை 10.30 மணி அளவில் அஞ்சலி செலுத்தினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago