Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 நவம்பர் 30 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேலம்;
'முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆவதில் ஏற்பட்ட பிரச்சினையில் மேல்முறையீடு செய்வோம்,'' என, முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாநகர அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று, உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இதை ஆய்வு செய்த முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: அம்மா கிளினிக் தொடர்ந்து செயல்பட வேண்டும். அதில் பணியாற்றும் டொக்டர்கள், மருத்துவ உதவியாளர்களை நிறுத்தக் கூடாது. தொடர்ந்து இயங்க திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர் மழையால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். மீண்டும் சேத மதிப்புகளை கணக்கிட்டு நிவாரணம் வழங்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகிறது.மழையால் நெல் வீணாவதைத் தடுக்க வேண்டும். சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை உடனே அகற்றி, பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கு மாநில அரசாங்கம் கேட்கும் நிதியை உடனே வழங்க, மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு, அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை செய்து, நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
5 minute ago
8 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
18 minute ago