2025 மே 03, சனிக்கிழமை

‘ஜெய் பாபு, ஜெய் பீம்’ பிரசார பேரணி நாளை ஆரம்பம்

Freelancer   / 2025 ஜனவரி 02 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்மோகன் சிங் மறைவால் ஒத்திவைக்கப்பட்ட ‘ஜெய் பாபு, ஜெய் பீம்’ பிரசார பேரணி, நாளை (3) தொடங்கப்படும் என்று, காங்கிரஸ் அறிவித்துள்ளது.

சுதந்திரத்துக்காக பாடுபட்ட காந்தியின் புகழ் மற்றும் அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை நினைவு கூறும் வகையிலும், நாடு முழுவதும் மத்திய, மாவட்ட, மாநில அளவில் 'ஜெய்பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம்' என்ற கோஷத்துடன் பேரணிகள்,கூட்டங்கள் நடத்தப்படும் என்று, கடந்த மாதம் 26ஆம் திகதி, பெலகாவியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதே நகரில், 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம்' என்ற பிரசார பேரணி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கடந்த 26ஆம் திகதி இரவு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். 

அவரது மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டது. அதனால், 27ஆம் திகதி நடத்த திட்டமிட்டிருந்த பேரணி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே, 7 நாட்கள் துக்கம் முடிவடையும் நிலையில், நாளை (03) 'ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம்' பிரசார பேரணி ஆரம்பமாகவுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X