2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

டாட்டூ கலைஞர் மீது பிரபல மொடல் அழகி உட்பட மூவர் புகார்

Ilango Bharathy   / 2022 மார்ச் 06 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

டாட்டு கலைஞர்  மீது பிரபல மொடல் அழகி யொருவர் உட்பட 3 இளம் பெண்கள் பாலியல்  புகார் அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் அண்மைக்காலமாக உடலில் டாட்டூ வரைந்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக மொடல் அழகிகள், நடிகைகள் மற்றும் இளம் பெண்கள் டாட்டூ வரைந்து கொள்வதில் அதிகளவு ஆர்வம் காட்டி வருவதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் கொச்சியிலுள்ள பிரபல டாட்டு கலைஞர் ஒருவர் தன்மீது பாலியல் சுரண்டலில் ஈடுபட்டதாக பிரபல மொடல் அழகியொருவர் தனது  சமூக வலைத்தளப் பக்கத்தில் அண்மையில் பதிவிட்டு இருந்தார்.

இவ்விடயம் இணையத்தில் வைரலாகவே குறித்த டாட்டு கலைஞரால் பாதிக்கப்பட்ட மேலும் 3 இளம் பெண்கள் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கொச்சி பொலிஸார்  டாட்டூ கலைஞர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் அந்நபர் தலைமறைவாகி விட்டார் எனவும், அவரைப் பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .