Freelancer / 2025 ஜனவரி 19 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி, டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த விழாவில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பலருக்கும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் பெரும் கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி ஆகிய இருவரும், ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக அவர்கள் இருவரும், சனிக்கிழமை (18) அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதன்போது, ட்ரம்பின் புதிய அரசில் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் உட்பட முக்கிய விருந்தினர்கள் அமரும் மேடையில் முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானிக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பதவியேற்பு விழாவுக்கு முன்பாக துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி. வான்ஸ் அளிக்கும் இரவு விருந்தில், முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி பதவியேற்பு விழா வழக்கமாக அமெரிக்க பாராளுமன்றத்துக்கு அருகே பொதுவெளியில் நடத்தப்படும் நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக பாராளுமன்றத்துக்குள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
3 hours ago
4 hours ago