2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

’டெல்லிக்கு வந்தடைந்தார் பிளின்கன்’

A.K.M. Ramzy   / 2021 ஜூலை 28 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லி :

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன், இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் பொறுப்பேற்ற பின், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் முதல் முறையாக இந்தியா வந்துள்ளார்.

நேற்று இரவு அவர் டெல்லி வந்தடைந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை இன்று சந்தித்து பேசுகிறார்.

இந்தியா - அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம், இந்தோ - பசிபிக் கூட்டுறவை விரிவுபடுத்துவது உள்ளிட்டவை குறித்து, இருநாட்டு தலைவர்களும் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன், பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அமைச்சர் பிளின்கன் சந்தித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .