2025 மே 06, செவ்வாய்க்கிழமை

டெல்லியில் 107 போலி சட்டத்தரணிகள் நீக்கம்

Freelancer   / 2024 ஒக்டோபர் 29 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெல்லியில், கடந்த 2019ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 107 போலி சட்டத்தரணிகள், அந்நாட்டு பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்திய பார் கவுன்சில் தனது கண்ணியம் மற்றும் நிபுணத்துவத்தை பராமரிக்கும் வகையில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதில் போலி வக்கீல்களை கண்டறிந்து நீக்கும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 இதில் பெரும்பாலானோர் போலியான சான்றிதழ்கள் மற்றும் பதிவு செய்யும் போது தவறான தகவல்களை வழங்கியவர்கள் ஆவர். 

மேலும், தீவிரமான வக்கீல் பணிகளில் தோல்வி, பார் கவுன்சிலின் சரிபார்ப்பு செயல்முறைகளுக்கு இணங்காதது போன்றவையும் காரணமாகும் என்றும் தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X