2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

டெல்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

டெல்லியில் பண்டிகைக் காலத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் பொலிஸ் ஆணையர்  ராகேஷ் அஸ்தானா ஆலோசனை நடத்தினார். அப்போது, பயங்கரவாதிகளுக்கு உள்ளூர் குற்றவாளிகள் உதவுவதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போது, பொலிஸ் ஆணையர்  ராகேஷ் அஸ்தானா கூறியதாவது: டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்ளூர் குற்றவாளிகள் உதவி இல்லாமல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த முடியாது.

தாக்குதல் நடத்துவதற்கு ரவுடிகள், சமூக விரோதிகள், குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் உதவலாம். இரசாயன கடைகள், இன்டர்நெட் மையங்கள், பழைய பொருள் விற்பனையாளர்கள், கார் டீலர்கள், வாகன நிறுத்துமிடங்கள் தொடர்ச்சியாக கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும்.

பெற்றோல் பங்குகள் மற்றும் பெற்றோல்  தாங்கிகள் குறி வைக்கப்படலாம் எனவும் தகவல் வந்துள்ளது. இவ்வாறு பொலிஸ் ஆணையர்  ராகேஷ் அஸ்தானா கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .