A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை;
சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிபிஐ தலைமை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கமும் சுரானா நிறுவனத்தில் உள்ள லொக்கரில் வைத்தே சீல் வைக்கப்பட்டது. அந்த லொக்கர்களின் 72சாவிகளும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
சுரானா நிறுவனத்தின் லொக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது, 296 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103 கிலோ 864 கிராம் எடையுள்ள தங்கத்தைக் காணவில்லை. மாயமான தங்கத்தை கண்டுபிடிக்கும் பொறுப்புதற்போது சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருக்கிறதா என்று துறை ரீதியாக விசாரணை நடந்து வருகிறது. இதில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிஐ தலைமை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago