A.K.M. Ramzy / 2021 மார்ச் 07 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தர்மசாலா,
புத்த மத தலைவர் தலாய்லாமா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.இந்தியாவில் கடந்த 1ஆம் திகதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் தினந்தோறும் இலட்சக்கணக்கானோர் பங்கேற்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
அந்தவகையில் திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா நேற்று இமாசல பிரதேச தலைநகர் தர்மசாலாவில் உள்ள மண்டல ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இதற்காக இந்திய அரசுக்கும், இமாசல பிரதேச மாநில அரசுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும் மக்கள் அதிக எண்ணிக்கையில் தைரியத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
19 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago