Ilango Bharathy / 2021 டிசெம்பர் 29 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவர் கொரோனாத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள பயந்து மரத்தில் ஏறிய சம்பவம் புதுச்சேரி மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கோனேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த குறித்த நபர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதற்கு பயந்து தடுப்பூசி செலுத்தாது நாட்களைக் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் சுகாதார அதிகாரிகள் அவரைத் தடுப் பூசி செலுத்திக் கொள்ளுமாறு வற்புறுத்தவே தனக்கு மரம் வெட்டும் வேலை இருப்பதாகக் கூறி உடனடியாக மரத்தில் ஏறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செவிலியர்அவரை வற்புறுத்தவே, வேண்டுமானால் மரத்தில் ஏறி வந்து ஊசி செலுத்திக் கொள்ளுங்கள் என அவர் பிடிவாதமாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வேறு வழியின்றி செவிலியர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து வெளியான வீடியோவொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago