2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடக்கும்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 12 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரை நடைபெறும் எனவும், திட்டமிட்டபடி டிசம்பர் 6ஆம் திகதி திருச்செந்தூரில் நிறைவு செய்வோம் என்றும் தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

வேல் யாத்திரை தொடர்பாக எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபாவளி பண்டிகை காரணமாக நேற்று முதல் யாத்திரை நிறுத்தப் பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி  முதல் வேல் யாத்திரை தொடர்ந்து நடைபெறும். எத்தனை தடைகள் வந்தாலும் வேல் யாத்திரையை டிசம்பர் 06 ஆம் திகதி   திருச்செந்தூரில் நிறைவு செய்வோம்.

வேல் யாத்திரையில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். எதிர்வரும் 22ஆம் திகதி அமைச்சர் சதானந்த கௌடா கோவையில் கலந்துகொள்கிறார்.

23 ஆம் திகதி முரளிதரன், 24 ஆம் திகதி கர்நாடக செய்தித் தொடர்பாளர் மாளவிகா அஸ்வினி, டிசம்பர் 2 ஆம் திகதி இளைஞரணிச் செயலாளர் தேஜஸ்வி சூர்யா ஆகியோரும் கலந்துக்கொள்கின்றனர்.

இறுதி நாளான டிசம்பர் 6 ஆம் திகதி கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஜே.பி. நட்டா கலந்துகொள்வது ஓரிரு நாளில் உறுதி செய்யப்படும். கொரோனா முன்களப்பணியாளர்களை பாராட்ட, மத்திய அரசின் திட்டங்கள் பற்றி பேசவே வேல்யாத்திரை நடத்துகிறோம்.

கோவிலுக்கு யாத்திரையாக செல்வது மதம் சார்ந்த நிகழ்ச்சியா? இவ்வாறு அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .