2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தட்டிக்கேட்ட பொலிஸாரின் விரலை கடித்த வழக்கறிஞர்

Editorial   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை,

சென்னையில் தட்டிக்கேட்ட பொலிஸாரை தாக்கிய சுரேஷ்குமார் என்ற வழக்கறிஞர் கைதுசெய்யப்பட்டார்.

தண்டயார்பேட்டையில் உள்ள பேக்கரி ஒன்றில் ஒரு நபர் தகராறு செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தலைமை காவலர் மாயக்கண்ணன் மற்றும் லோகநாதன் இருவரும்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தகராறு செய்த நபரிடம் பொலிஸார்  விசாரித்ததில் அவர்  வழக்கறிஞர் சுரேஷ்குமார் என தெரியவந்துள்ளது.

வழக்கறிஞர் சுரேஷ்குமார்  தகாத வார்த்தைகளால் பொலிஸாரை திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சுரேஷ்குமாரை பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதை தொடர்ந்து அவர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார் . அங்கு இருந்த  காவலர் பாபுவின் கை விரல்களை கடித்துள்ளார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .