Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 மார்ச் 22 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதியவர் ஒருவர் தனது மகன், மருமகள், மற்றும் இரண்டு பேத்திகளை உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழை சீனிக்குழியை சேர்ந்தவர் ஹமீது. 79 வயதான இவர் தனது மகன் முகம்மது பைசல், மருமகள் ஷீபா மற்றும் பேத்திகள் மெஹர் , அஸ்னா ஆகியோரோடு வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் முகம்மது பைசலுக்கும், ஹமீதுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளதாகவும் இதனால் இருவருக்கும் அடிக்கடி கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகன் மீது ஆத்திரமடைந்த முதியவர் கடந்த 18 ஆம்திகதி இரவு 10 மணியளவில் மகன் மற்றும் பேத்திகளின் அறையை வெளிப்புறமாக பூட்டி விட்டு கதவின் கீழே பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தீயில் கருகி நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து அம் முதியவர் தன்னுடைய உறவினர்களிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ”மகன் மற்றும் மகனின் குடும்பத்தினரை உயிரோடு தீ வைத்து கொன்று விட்டேன்” எனக் கூறியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தவே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த முதியவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago