2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

தன் கண்ணையே பிடுங்கி எறிந்த முதியவர்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 03 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதியவர் ஒருவர் தனது கண்ணையே பிடுங்கி எறிந்த சம்பவம் கர்நாடகாவில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பத்ராவதியை சேர்ந்த குறித்த முதியவர் சம்பவ தினத்தன்று தனது கண்ணில் அட்டை புகுந்து விட்டது என்று எண்ணி தனது கைகளாலே ஒரு கண்ணை பிடுங்கி எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தனது  பேரனை அழைத்து அவனிடம் நடந்தவற்றைக் கூறி கீழே விழுந்து கிடந்த கண்ணை நசுக்கும் படி கூறியதாகவும், பேரனும் அவ்வாறே செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு வந்த முதியவரின் மகன்,  தனது தந்தையின் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்தாகவும், பின்னர் அவரை அழைத்துக் கொண்டு வைத்தியசாலை சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X