Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்காக, வாகனங்கள் நிறுத்துவதற்காக சுமார் 25 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை நிலங்கள் தெரிவுசெய்யப்பட உள்ளது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு வருகிற 27ஆம் திகதி, விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை இடத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக, சுமார் 85 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாநாட்டில் சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாநாட்டில் பங்கேற்க வருவோர் வசதிக்காக வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று 27 ஏக்கர், 6½ ஏக்கர், 3½ ஏக்கர், 3 ஏக்கர் என இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்போரின் எண்ணிக்கை அதிகமாவதை தொடர்ந்து வாகனங்கள் நிறுத்துவதற்காக சுமார் 25 ஏக்கர் முதல் 50 ஏக்கர் வரை இடத்தை தேர்வு செய்யும் பணியில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு மட்டுமின்றி பாதுகாப்புக்காக டுபாய் தனியார் சிறப்பு பாதுகாப்பு படையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
2 hours ago
2 hours ago