2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தமிழகத் தாயின் மகள், அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா துணை  ஜனாதிபதி கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். தனது படிப்புக்காக அமெரிக்கா சென்றவர். ஷியாமளா கோபாலனுடன் படித்த ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்த டொனால்டு ஹாரிசை திருமணம் செய்தார்.

 இதேவேளை,இதில் கமலா அய்யர் என்ற பெயர், கமலா ஹாரிசாக மாறியது; அமெரிக்கா துணை  ஜனாதிபதியாக இந்தாண்டு கடந்த ஜனவரியில் பதவியேற்றார். ஆபிரிக்க தந்தை, இந்திய தாய்க்கு பிறந்த துணை  ஜனாதிபதி, அமெரிக்காவின் முதல் பெண் துணை  ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

அமெரிக்க துணை  ஜனாதிபதி கமலா ஹாரிசின் வாழ்க்கையை விளக்கும் வகையில், இந்தியாவை பூர்வீகமாக உடைய பிரபல பத்திரிகையாளர் சித்தானந்த ராஜ்கட்டா ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மொத்தம், 300 பக்கங்கள் உடைய இந்த புத்தகம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

ஷியாமளா கோபாலனின் அமெரிக்க வாழ்க்கையில் ஆரம்பமாகி, அமெரிக்க துணை  ஜனாதிபதி கமலா ஹாரிசின் சிறு வயது அனுபவங்கள், அவருடைய விருப்பங்கள் உள்ளிட்டவை இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

கமலா ஹாரிஸ் பிறந்த போது அவரது பிறப்பு சான்றிதழில், முதலில் கமலா அய்யர் ஹாரிஸ் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. பின் அது கமலா தேவி ஹாரிஸ் என மாற்றப்பட்டுள்ளதாக புதிய தகவலும் இந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமலாவின் சமையல் விருப்பம், இட்லி, தோசை மீதான காதல் போன்ற சுவாரஸ்ய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .