A.K.M. Ramzy / 2020 நவம்பர் 23 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழகத்தில் எதிர்வரும் தேர்தலிலும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபட தெரிவித்தனர்.
சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில், முதல்வர் பழனிசாமி தலைமை உரை நிகழ்த்திய போதே இவ்வாறு கூறினார்.
தமிழக அரசு அமைதி, வளம், வளர்ச்சியின் அடிப்படையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் பயனை அனைத்து மக்களும் பெறும் வகையில் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. இதனால்தான் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை தீர்க்க தற்போது ரூ.380 கோடியில் செயல்பாட்டுக்கு வந்துள்ள தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்க திட்டம்போல பல நீர்வள ஆதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும். எதிர்வரும் 2021 சட்டப் பேரவை பொதுத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
22 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
32 minute ago